திரைப்படத் தயாரிப்பாளர் தமிழ் அழகன் காலமானார்; ரஜினிகாந்த் இரங்கல் தெரிவிப்பு.!
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன், பல முக்கிய திரைப்படங்களை தயாரித்தவர். அவர் தயாரித்த படங்களில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம் மற்றும் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி உள்பட சில திரைப்படங்கள் அடங்குகின்றன.
இவர் சத்யராஜ், நதியா நடித்த மந்திரப்புன்னகை (1986), ஆனந்த், திவ்யபாரதி நடித்த நிலாபெண்ணே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக, அவர் பெப்ரவரி 14ஆம் திகதி அன்று காலமானார்.அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கலில், “எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.