நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களில் களமிறங்குகிறார்.!
நடிகர் ரஜினிகாந்த், கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜெயிலர் – 2 படத்தில் நடித்துவருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும்வரை, இயக்குநர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார்.
படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கும் ரஜினிகாந்த் தயாராக உள்ளார்.இப்படத்தின் புரோமோ பணிகள் நெல்சன் இயக்கத்தில் நடைபெற்று வருகின்றன.ஜெயிலர் – 2, ரஜினி – 173, மற்றும் கமல்ஹாசன் உடன் திரைப்படம் என ரஜினிகாந்த் தொடர்ந்து ஓய்வின்றி களமிறங்குவதைப்பற்றி ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.