உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
147 பார்வைகள்

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,190 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘கல்ஹாரா’ என்றழைக்கப்படும் ‘டின் மல்லி’ என்பவரின் சொந்தச் சகோதரர் எனப் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முவங்கல மற்றும் கல்மடுவ பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த பிறிதொரு சந்தேகநபரிடம் பெறப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரிலும், அம்பாறை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலின் கீழும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன ஆகியோரின் மேற்பார்வையிலும் இச்சோதனை நடவடிக்கை திட்டமிட்டு நடத்தப்பட்டது.

அம்பாறைத் தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் பரிசோதகர் சாந்தகுமார தலைமையிலான பொலிஸ் கொன்ஸ்டபிள்களான நந்தன (15991), ஜெயசிறி (43151), சோமரத்ன (66475) மற்றும் குணவர்தன (73734) ஆகியோரைக் கொண்ட விசேட பொலிஸ் குழுவினரே இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை பொலிஸ் எல்லைக்குள் வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகப் பொலிஸார் எடுத்து வரும் இத்தகைய திட்டமிட்ட அதிரடி நடவடிக்கைகள் போதைப்பொருள் வலையமைப்பின் முதுகெலும்பை உடைப்பதாக அமைந்துள்ளதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

148 0 0