உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ்ப்பாணப் பின்னணியில் உருவான ‘அந்தோனி’ – விரைவில் திரைக்கு.!

சினிமா 8 மாதங்கள் முன்
55 பார்வைகள்

கயல் வின்சன்ட் மற்றும் டி.ஜே. பானு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘அந்தோனி’ விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன் மற்றும் சவுமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.


சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பை இசைஞானி இளையராஜா மேற்கொண்டுள்ளார்.இலங்கையில் போருக்குப் பிறகான வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளன.

நெய்தல் நிலப் பின்னணியில் கடல் வாழ்வியல், காதல், குடும்ப வாழ்க்கை மற்றும் ஆழமான உணர்வுகளை இணைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தயாரிப்புதரப்பினர் தெரிவித்துள்ளனர்.ஓசை பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘அந்தோனி’ திரைப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டனர். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

70 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

61 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

68 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

84 0 0