உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
73 பார்வைகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

கண்ணகி வித்தியாலய அதிபர் வாரி கங்கரப்பிள்ளை ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயாகரன், மட்டக்களப்பு மேற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.சக்திதாஸ், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் என்.சதீஸ்குமார், கட்டடத்திற்கான நன்கொடையாளர்களான திருமதி. வசந்தி நரேந்திரன், செல்வி சாரதா மனோகரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.அரியதாஸ், கொடுவாமடு கிராம அதிகாரி கு.பிரதீப்குமார், நன்கொடை அமைப்பான லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய இணைப்பாளர்கள் ந.ஆனந்தராஜா, எல்.அனோஜன், ஏறாவூர்ப்பற்று மேற்கு கோட்டப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

செங்கலடி பதுளை வீதியில் கஷ்ட பிரதேச பாடசாலையான காயான்குடா கண்ணகி வித்தியாலயத்திற்கு ஏற்கனவே லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தினால் இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் மொன்று அமைத்து பாடசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களுக்கு கடந்த பதினொரு வருடங்களாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆறு ஆலயங்கள் முழுமையாக புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுத்துள்ளனர். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட குளாய் கிணறுகளும், 15 கிணறுகளும் இவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.

பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஆடுகள் மற்றும் சுயதொழில் உதவிகளும் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தினரால் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் போது லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு மற்றும் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

120 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0