உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஓட்டமாவடியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
83 பார்வைகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு புனாணை 23 ஆவது படைப்பிரிவும் அகில இலங்கை ஜனாஷா சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மாணவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று 04/02 ஓட்டமாவடி டைவர்ஸ் பார்க்கில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் ஆரம்ப வைபவமாக கிரான் மகா வித்தியாலய மாணவர்களினால் பாண்ட் (Band) வாத்தியம் இசைக்கப்பட்டு மூவின பாடசாலை மாணவர்கள் நடைபவனியாக வருகைதந்துடன் அதிதிகளும் அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டடு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த அனைவருக்கும் ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சர்வமத குருமார்களின் ஆசி உரைகளும் இடம்பெற்று தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரிகள், முதலுதவி பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் சேவையாளர்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் G.S.K.Perera, இலங்கை கடற்படை கட்டளை தளபதி M.G.A. குமார, இலங்கை உயிர் காப்பு சேவை பிரிவின் தலைவர் அத்துல்ல செனரொட்னா, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி F.P.நிலங்க, திட்டமிடல் பணிப்பாளர் M.M. முபாரக், ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் A.இலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0