உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

சிறப்பாக நடைபெற்ற வட மாகாண விவசாய கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
1 பார்வைகள்

வட மாகாண விவசாயக் கண்காட்சி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.

வடமாகாண விவசாய திணைக்களம் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தினை நோக்கி என்ற கருப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான வடமாகண விவசாய கண்காட்சி இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் ஒட்டுசுட்டானில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஆர்.எச். உபாலி சமரசிங்க மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவசிறி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட்வாத்திய அணி இசை வகுப்பு மற்றும் குடமுழுக்கு கலை அலங்காரத்துடன் அழைத்துவரப்பட்டு விவசாய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்த கால்நடை உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு காசோலை பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

விவசாய கண்காட்சியினை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பெருமளவானவர்களால் கலந்துகொண்டு பார்வையிட்டு வருகின்றார்கள்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்…

9 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (11) காலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுகுடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா ரக வாகனம் பரந்தன்…

22 0 0
இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை.!

கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ‘A330’ ரக பயணிகள் விமானத்தின் மீது பறவையொன்று மோதியுள்ளது. இதனால் ஏற்பட்ட அவசர நிலைமையைத்…

20 0 0
இலங்கை செய்திகள்

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்…

23 0 0