உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
95 பார்வைகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கண்ணன் அறநெறிப் பாடசாலை ஏற்பாட்டில் லண்டன் கார்திகேசு சிவநேசன் அவர்களின் நிதி அனுசரணையில் திரு.க.துரைராஜா அவர்களின் தலைமையில் வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலயம் முன்பாகவுள்ள அன்னதான மடத்தில் பொங்கல் விழா நிகழ்வு இன்று 25.01.2025 நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் பின்னர் காலாச்சார மரபுடன் அதிதிகள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், ஆசியுரை, மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள், கெளரவிப்பு நிகழ்வு, அதிதிகள் உரை, கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை வந்தாறுமூலை வட்டார உறுப்பினர் த.பிரபாகரன், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய குருக்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0