குளத்தில் நீராடச் சென்ற மாணவன் உயிரிழப்பு.!
வவுனியா – மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா – கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று மாலை நீராடச் சென்றுள்ளனர்.
மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவராவார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.