உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் பதவி விலகல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
73 பார்வைகள்

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம் உடுகஹபத்துவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தில்,
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர், சங்கத்தின் வளர்ச்சிக்காக தனது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்ததாக தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடிகள், நிர்வாக சவால்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு சங்கங்களில் தமது சங்கத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சங்கம் கடுமையான அரசியல் தலையீட்டுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிருப்தி வெளியிட்டும் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாததால் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், தலைவர் பதவியின் மதிப்பை குறைத்துக்கொண்டு தொடர விரும்பாத காரணத்தினாலேயே பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உப தலைவரும் குறித்த அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0