உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கந்தளாயில் மீண்டும் யானைகளின் அட்டகாசம்! விவசாயிகளை காப்பாற்றுமாறு கோரிக்கை.!

Uncategorized 9 மாதங்கள் முன்
64 பார்வைகள்

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட 93-ம் கட்டைப் பகுதியில், இன்று அதிகாலை மீண்டும் காட்டு யானைகள் புகுந்து, விளைநிலங்களைச் சூறையாடியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், பல வருடங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த, காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளன.தென்னை மரங்கள் மட்டுமன்றி, வயல் நிலங்களையும் யானைகள் மிதித்துச் சேதப்படுத்தியுள்ளன.

இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லவோ, வீட்டை விட்டு வெளியே வரவோ முடியாத ஒரு அபாயகரமான சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கையில்: “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தப் பயனும் இல்லை.

எங்களது வேதனையை யாரும் காதுகொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லை. அதிகாரிகளிடம் நாங்கள் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறோம், தயவு செய்து விவசாயிகளாகிய எங்களையும் எங்கள் வாழ்வாதாரத்தையும் காட்டு யானைகளிடமிருந்து காப்பாற்றுங்கள்,” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இக்காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

109 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

198 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0