உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சு.சபேசன் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
99 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தின் மைந்தன் zee tamil சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பெற்ற திரு.சு.சபேசன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு.தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் பாடசாலை காலை ஒன்று கூடல் வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சபேசன் அவர்கள் பூமாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை சமூகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், சபேசன் அவர்களினால் கல்வி சார் பாடல் ஒன்று மாணவர்களுக்காக பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0