உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

நேபாளத்தில் தரையிறங்கும் போது சறுக்கிய புத்தா ஏர் விமானம்!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
39 பார்வைகள்

நேபாளத்தின் புத்தா ஏர் (Buddha Air) விமானம் ஒன்று, ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பத்ராபூர் விமான நிலையத்திற்கு புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டது.குறித்த விமானம் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விமான கண்காணிப்புத் தரவுகளின்படி , இந்த விபத்துக்குள்ளான விமானம் 9N-AMF இலக்கத்தைக் கொண்ட ATR 72-500 ரக டர்போபிராப் பயணிகள் விமானமாகும்.விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையிறக்கப்பட்டது. இதில், விமானம் சிறியளவில் சேதம் ஏற்பட்டது.

விமானம் நிறுத்தப்பட்டதும் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தற்போது காத்மாண்டுவில் இருந்து தொழில்நுட்ப மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

19 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

49 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

61 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

46 0 0