உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
47 பார்வைகள்

மலர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2026ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று(1) காலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

இச் சத்தியப் பிரமாண நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அதிதியாக பங்கேற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

இந் நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய நிர்வாகப்பிரிவு உள்ளிட்ட பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, கல்முனை தலைமையக பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், அலுவலக ஊழியர்கள், கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் நாட்டிற்காக உயிர் நீத்த அனைவருக்கும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0