விபத்தில் சிக்கி இளைஞன் உ**யிரிழப்பு.!
வவுனியாவில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் வவுனியா, பூந்தோட்டம் பெரியார்குளத்தைச் சேர்ந்த சதுர்சன் (வயது 24) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
நேற்றைய தினம் வவுனியா வடக்கு, நெடுங்கேணிக்கு அண்மித்த பகுதியில் அவர் பயணித்த உந்துருளி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


