பாரிய வெடி விபத்தில் 7 மாணவர்கள் உ**யிரிழப்பு.!
கிழக்கு ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 7 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் 97 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை சுமார் 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீடு ஒன்றில், குணார்-நூரிஸ்தான் சாலைப் பணிகளுக்காகச் சுரங்க வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை திடீரென வெடித்துச் சிதறியதாகவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் வெடிப்பில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் குணார் மாகாண மருத்துவமனைகளிலும், 4 பேர் மேல் சிகிச்சைக்காக ஜலாலாபாத்தில் உள்ள மண்டல மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் குணார் மாகாணத்தைச் சேர்ந்த தடயவியல் மற்றும் விசாரணைக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் காபூலில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த கைக்குண்டுத் தாக்குதலில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்த நிலையில் தற்போது இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


