உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 20.10.2026

ராசி பலன்கள் 2 நாட்கள் முன்
85 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். பெயர், புகழ், பாராட்டு கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய வெற்றியை கொடுக்கும். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இன்று கிடைக்கும். உங்களால் முடிந்தால் இன்று இயலாதவர்களுக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு இரண்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு கிடைக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு புதுசாக ஏதாவது கற்றுத் தர வேண்டும் என்றால், இன்று பிள்ளையார் சுழி போடலாம். எதிர்காலத்தில் அவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். கொஞ்சம் அசதி இருக்கும். இருந்தாலும் உங்களுடைய கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் நிச்சயம் நடக்கும். இன்று பொறுமை காப்பது அவசியம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். நீங்கள் இன்று தொடங்கக்கூடிய நல்ல விஷயங்கள், எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுமூகமான சூழ்நிலை நிலவும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். மனதிற்கு இதமான அனுபவங்கள் கிடைக்கும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். ஏதாவது புது விஷயங்கள் தொடங்க வேண்டும் என்றால் இன்று தாராளமாக நீங்கள் தொடங்கலாம். நல்லதே நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சாதனை படைப்பீர்கள். புது முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். பெண் பிள்ளைகளுக்கு இன்று மிக அற்புதமான நாளாக இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். இந்த நாளில் மேற்கொள்ளும் புது முயற்சிகள், பல மடங்கு அபரிவிதமான வெற்றியைத் தரும். நல்லது மட்டுமே இன்று நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இறை வழிபாட்டின் மூலம் மன நிம்மதி கிடைக்கும். காரிய தடை விலகும். கடன் சுமை குறையும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் மனநிறைவை கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்ய விடாமல், சில பேர் பிரச்சினை கொடுப்பார்கள். பிரச்சினைகளை மனதிற்குள் கொண்டு செல்ல வேண்டாம். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பிரச்சினை தருபவர்களிடமிருந்து நீங்கள் ஒதுங்கி விடுங்கள், அவ்வளவுதான்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகள் வெற்றி தரும். இறைவனின் இறை அருளால் குடும்பத்தில் எந்த குறையும் இருக்காது. சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். காரிய தடை விலகும் நாள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாமல் வைத்திருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். உங்களுடைய முகத்தில் தெளிவு பிறக்கும். மனதில் தெளிவு பிறக்கும். வசீகரத் தோற்றத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பகை விலகும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவமான நாளாக இருக்கும். எந்த இடத்தில் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் தலை நிமிர்ந்து உங்களுடைய திறமையை நிலை நாட்டுவீர்கள். உங்கள்…

85 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். மகிழ்ச்சியில் ஒரு கிலோ எடை கூடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.…

76 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். மன நிம்மதி கிடைக்கும். வீட்டில் இறை வழிபாடு செய்வது சந்தோஷத்தை இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய முன்னேற்றத்தில் அக்கறை…

79 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பெருமாள் வழிபாடு மனதிற்கு அமைதி தரும். கடன் சுமை…

101 0 0