உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

அனோஜனின் விடுதலைக்காக சவூதி தூதுவரைச் சந்தித்து முறையிடத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சி.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
12 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த நாட்டுப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இது குறித்துப் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

“சவூதி அரேபியாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு, இலங்கைக் குடியரசுக்கான சவூதி அரேபியத் தூதுவரை நேரடியாகச் சந்தித்து அவர் ஊடாக ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அங்கத்துவச் சகோதரக் கட்சித் தலைவர்களிடம் கோரியுள்ளேன்.

இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். மேலும், இந்த விடயத்தை நமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்த விடயத்தைச் சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச் செல்லுமாறும் கோருகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

29 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

24 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கடலாமைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

32 0 0
இலங்கை செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது…

30 0 0