உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

அனோஜனது மரண தண்டனையை இரத்து செய்ய தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
29 பார்வைகள்

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் அவர்களின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களுடன் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் அவர்கள் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்து அல்லது குறைப்பதற்கும், சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்குமாரியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

20 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்.!

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்மொழியப்பட்டுள்ள…

24 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருட்களுடன் இருவர் கைது.!

வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை…

21 0 0
இலங்கை செய்திகள்

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ…

24 0 0