உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 46 நிமிடங்கள் முன்
24 பார்வைகள்

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முன்மொழியப்பட்டுள்ள இவ் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், பூங்கா வளாகத்தைச் சுத்தப்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக நிலத்தை மட்டப்படுத்துதல் உள்ளிட்ட பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் வழிகாட்டலில், பொறியியலாளர் ஹலீம் எஸ். மொஹமட் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இப் பணிகளில் பிரஜா சக்தித் தலைவர்களான சஜாத், பைரூஸ், நவாஸ் ஆகியோருடன் நஜீம், சுஜான் மற்றும் அனஸ் உள்ளிட்ட பலரும் நேரில் கலந்துகொண்டு தமது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கினர்.

கல்முனை பிரதேச மக்களுக்கும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் சுத்தமான, பாதுகாப்பான மற்றும் எழில்மிகு பொது இடமாக இப் பூங்காவை மாற்றுவதற்கான முதற்கட்டப் படியாக இச் செயற்பாடு அமைகின்றது.

இத் திட்டத்தினூடாகப் பொழுதுபோக்கு, சமூக நிகழ்வுகள், சுற்றுலா மற்றும் உள்ளூர் வணிகப் பொருளாதார வாய்ப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதோடு, கடற்கரைப் பூங்காவின் தோற்றத்தையும் பயன்பாட்டையும் மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்குமாரியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

20 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருட்களுடன் இருவர் கைது.!

வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை…

21 0 0
இலங்கை செய்திகள்

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ…

23 0 0
இலங்கை செய்திகள்

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு; உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த…

10 0 0