மட்டக்குளியில் இடம்பெற்ற கோர விபத்து; சாரதி போ*தைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி.!
கொழும்பு, மட்டக்குளி, பெர்குசன் வீதியில் நேற்று (17) புதன்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய காரைச் செலுத்திய மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து நடந்த சமயத்தில் குறித்த சாரதி கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்றைச் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்களாவர்.
இந்த சம்பவம் குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.