உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

குருக்கள்மடம் பகுதியில் ஐப்பசி மாதம் 06ம் திகதி அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும்!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
94 பார்வைகள்

குருக்கள்மடம் பகுதியில் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொ@லை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண் படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இன்று தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்னமே கடந்த பங்குனி 30ம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எத்தகு தடயங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குறித்த பகுதில் மேலும் சில இடங்களைச் சுட்டிக்காடி தங்கள் சொந்த செலவில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த பகுதி ஸ்கேன் செய்யப்பட்டதுடன். குறித்த அறிக்கையின் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அகழ்வாய்வு மேற்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்றைய தினம் அகழ்வாய்வினை மேற்கொள்ளும் தடயவியல் நிபுனர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகளை எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம் திகதி தொடக்கம் முன்னெடுப்பதற்கு இன்றைய தினம் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.…

26 0 0
இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

26 0 0
இலங்கை செய்திகள்

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும்…

27 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,…

30 0 0