உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடவே செயற்குழுவைப் பயன்படுத்துகின்றது அநுர அரசு.!

இலங்கை செய்திகள் 60 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் கால அவகாசம் நீடிக்கப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்தக் குழு கூட்டத்தைப் புறக்கணித்தமை குறித்து ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்காக இந்த நாடாளுமன்ற விசேட குழு கடந்த 8 மாத காலமாகக் கூடியது.

மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவும், சட்டமா அதிபர் திணைக்களமும் தெளிவாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின் அதற்குரிய சட்ட திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரிந்துரைகள் குறித்துக் கவனம் செலுத்தினால் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காணலாம்.

ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பரிந்துரைகள் எதைக் குறித்தும் அரசு எந்தவொரு கவனமும் செலுத்தவில்லை. தேர்தலை எப்படியாவது பிற்போடுவதற்கான யோசனைகளுக்கு மாத்திரமே அரசு முன்னுரிமையளித்துச் செயற்பட்டது.

இதற்கமைய, இந்தக் குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்ற செயலாகும்.

தேர்தலை நடத்தும் உண்மையான நோக்கம் அரசிடம் சிறிதும் கிடையாது. குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன் தேர்தலை நடத்தத் தயார் என்று கூறிக்கொண்டு அரசு திட்டமிட்டுக் காலத்தை இழுத்தடித்து வருகின்றது.

எனவே, இவ்வாறு காலத்தை வீணடிக்கும் இந்த விசேட செயற்குழுவில் தொடர்ந்து பங்குபற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் இனி அந்தக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டோம் என்று ஒருமித்தமாகத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

29 0 0
இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப்…

23 0 0
இலங்கை செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய…

25 0 0
இலங்கை செய்திகள்

களுபோவில அவிஷ்கவின் போ*தைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திய நபர் சிக்கினார்.!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘களுபோவில அவிஷ்க’ என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன்…

26 0 0