உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
35 பார்வைகள்

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன் சிறை செல்கின்றார்கள் என்பதை நாட்டின் அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“அரசுக்குச் சவால் விடுவதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அனுராதபுரத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள்கூட ‘நாமல் திருடர்’ என்று முழக்கமிட்டவாறே பேரணியாகச் சென்றனர்.

இலவச மதுபானங்களை வழங்கி கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்கும் தங்களின் பழைய அரசியல் கலாச்சாரத்திலிருந்து ராஜபக்ஷக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. எப்படியாவது முறையற்ற வழிகளிலாவது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றே இவர்கள் தற்போதும் நினைக்கின்றார்கள்.

ஊழலுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளைச் சட்டத்தின் பிரகாரம் முன்னெடுப்பது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாக அமைய முடியும்?

ராஜபக்ஷக்களின் தவறான நிர்வாகத்தினால் தான் இந்த நாடே வங்குரோத்து நிலையை அடைந்தது என்று நாட்டின் உயர்நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வளவு உண்மைகள் வெளிப்பட்ட பின்னரும், இவர்கள் நாட்டு மக்களை இன்னமும் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு இவ்வாறு செயற்படுவது முற்றிலும் முறையற்ற செயலாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்.!

“தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட…

38 0 0
இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப்…

27 0 0
இலங்கை செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடவே செயற்குழுவைப் பயன்படுத்துகின்றது அநுர அரசு.!

மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்…

35 0 0