உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

சவுதி வான் படைத் தளத்தின் மீது ஹவூதி போராளிகள் தாக்குதல்!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
32 பார்வைகள்

தென் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள கிரேட்டர் ஹனீஷ் மற்றும் லெஸர் ஹனீஷ் (Greater and Lesser hanish) ஆகிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ஏமனின் ஹூதி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சவுதி அரேபியாவின் போர் வானூர்திகள், 54 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சவுதி அரேபியாவின் கமிஸ் முஷைத் (Khamis Mushait) பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிங் காலித் (King Khalid) வhன் படைத் தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தி தங்களது படைகள் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாகவும் ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இலக்குகள் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இது குறித்து சவுதி அரேபிய அரசhங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதில்களும் வெளியாகவில்லை.

முன்னதாக, வியூக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மொக்காவை (Mocha) சில நாட்களுக்கு முன்பு ஹூதிகள் கைப்பற்றினர்.

இந்தநிலையில்இ அந்த நகரைக் கைப்பற்றி மீட்கும் நோக்கில் சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகள் ஹூதிகளின் முகாம்கள் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் பல முனைகளிலும் தரைவழிப் போர் தீவிரமடைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஸாம்ஃபியாவில் இணையைத் தேடி 4,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யும் ஆப்பிரிக்கக் காட்டு நாய்கள்!

இணையை தேடி ஸாம்ஃபியாவில் (Zambia) நாடு முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் (2,485 மைல்கள்) தூரத்தைக் கடந்து ஆப்பிரிக்க காட்டு நாய்கள் (African Wild Dogs) வரலாற்று…

28 0 0
உலக செய்திகள்

அலங்கார செலவுகளுக்காக பல கோடி அரச பணத்தை வீணடித்த நெதன்யாகு!

இஸ்ரேலிய பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் சுமார் 4,70,000 டொலர்கள் (சுமார்…

26 0 0
உலக செய்திகள்

இதயத்தில் சிக்கிய ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!

சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளின்போது, குறித்த நபரின்…

29 0 0
உலக செய்திகள்

தமது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சீனா!

சீனாவிற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கை, தங்கள் குடிமக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கும் என்று…

11 0 0