உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

தமிழக முதல்வர் விஜய்யின் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்

இந்திய செய்திகள் 5 மணி நேரம் முன்
103 பார்வைகள்

தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் குடும்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதெல்லாம், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில், விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரில் இயங்கி வருவதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் கணக்கில் திவ்யா சாஷா தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவிடப்பட்டுள்ளதுடன், அண்மையில் உணவகத்தில் அவர் இருப்பது போன்ற சில புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.

மேலும், அந்தக் கணக்கில் ஜேசன் சஞ்சயின் கணக்கும், விஜய்யின் கணக்கும் குடும்ப உறவுகளைக் குறிப்பிடும் வகையில் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், இது உண்மையில் திவ்யா சாஷாவின் அதிகாரப்பூர்வ கணக்கா அல்லது போலியான கணக்கா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதேபோன்று, கடந்த ஏப்ரல் மாதத்திலும் திவ்யா சாஷா பெயரில் ஒரு சமூக ஊடகக் கணக்கு வைரலான நிலையில், சில நாட்களுக்குப் பின்னர் அந்தக் கணக்கு காணாமல் போயிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஜேசன் சஞ்சய் முன்னதாக வழங்கியிருந்த பேட்டியொன்றில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை தனது குழுவினரே நிர்வகிப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிடுவதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால், தற்போது திவ்யா சாஷா பெயரில் வைரலாகி வரும் கணக்கின் உண்மைத் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.

எனினும், குறித்த இன்ஸ்டாகிராம் கணக்கு திவ்யா சாஷாவின் அதிகாரப்பூர்வ கணக்கா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க…

99 0 0
இந்திய செய்திகள்

பயணிகள் வானூர்தியில் லண்டனைச் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இன்று (11) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன்…

160 0 0
இந்திய செய்திகள்

“இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைவாசத்தின்போது…

96 0 0
இந்திய செய்திகள்

குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் டெல்லியில் ஏழு பேர் உயிரிழப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டு…

156 0 0