உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

களுபோவில அவிஷ்கவின் போ*தைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திய நபர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
27 பார்வைகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘களுபோவில அவிஷ்க’ என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே கொஹுவலை – களுபோவில பகுதியில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 504 கிராம் ஹெரோயின், இலத்திரனியல் தராசு ஒன்று, 2 ரப்பர் முத்திரைகள் மற்றும் 2 கைத்தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

29 0 0
இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப்…

23 0 0
இலங்கை செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய…

25 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடவே செயற்குழுவைப் பயன்படுத்துகின்றது அநுர அரசு.!

மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்…

32 0 0