உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

பெருமளவான போ*தைப்பொருளை கைவிட்டு தப்பிச் சென்ற பயணி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளிலிருந்து 320 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருள் 60 காற்றுப்புகாத பொதிகளில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 32 கிலோ 91 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்றின் ஊடாக இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பயணப் பொதிகளின் உரிமையாளரான பயணி, விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விமான நிலையத்தின் சிசிரிவி கமராக்களின் காட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் பட்டியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.!

“அரச நிதியை மோசடி செய்துவிட்டுச் சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று கூறிக்கொள்கின்றார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷக்கள் ஏன்…

29 0 0
இலங்கை செய்திகள்

மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!

“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப்…

23 0 0
இலங்கை செய்திகள்

வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொ*லை.!

கொட்டாஞ்சேனை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை இரவு கூரிய…

25 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடவே செயற்குழுவைப் பயன்படுத்துகின்றது அநுர அரசு.!

மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்…

32 0 0