உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
60 பார்வைகள்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி (SLEAS III) அருட்தந்தை ஜெ. லெபோன் சுதன் நேற்று (07) உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிய அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் (FSC) ஓய்வுபெற்றுச் சென்றதைத் தொடர்ந்து, கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றிய ஏ. சுமன் பதில் அதிபராகப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்தநிலையிலேயே புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். ஸஹுதுல் நஜீம், கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சுரேஷ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர் எஸ். ஸ்ரீரங்கன், பழைய மாணவர் சங்கப் பொருளாளர் ரி. தர்ஷன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் சர்வமத ஆன்மீகத் தலைவர்கள், திருச்சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றுப் புதிய அதிபருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

116 0 0
இலங்கை செய்திகள்

எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி.!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

82 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவி கௌரவிப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலாமிடத்தையும், கல்முனைக் கல்வி வலயத்தில் முதன்மை…

78 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

57 0 0