துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வி.!
கொஸ்கொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தாக்குதல் பிரபல பாதாள உலக அமைப்பியல் குற்றவாளியான ‘கொஸ்கொட தாரக’ என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவரைக் குறிவைத்தே நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்குத் துப்பாக்கிதாரி முயன்றபோதிலும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி இயங்காததால் இலக்கு வைக்கப்பட்ட நபர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.