உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
45 பார்வைகள்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தையும், அவரின் மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

விசாரணைகள் நிலுவையில் இருந்த காலத்தில் இவர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை, கந்தளாய் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவிற்கமைய அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.!

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி தம்புளுவன, மாரலிய…

48 0 0
இலங்கை செய்திகள்

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையைக் கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும்.!

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைவதற்கு அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும் மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.!

அரசின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என்று மக்கள் போராட்ட…

56 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வி.!

கொஸ்கொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தாக்குதல் பிரபல பாதாள உலக அமைப்பியல்…

54 0 0