உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
75 பார்வைகள்

யானைத் தந்தங்களிலிருந்து பெறப்பட்ட 10 கஜமுத்துக்களை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்களை வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டை, மாத்தறை – தங்காலை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த 26, 28 மற்றும் 31 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04) அநுராதபுரம் புனித பூமி பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 10 கஜமுத்துக்கள் மற்றும் அவர்கள் பயணித்த சொகுசு கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.!

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி தம்புளுவன, மாரலிய…

48 0 0
இலங்கை செய்திகள்

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையைக் கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும்.!

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைவதற்கு அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும் மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.!

அரசின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என்று மக்கள் போராட்ட…

56 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம்.!

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி…

45 0 0