உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணி திட்டமிட்டபடி இடம்பெறும்

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
42 பார்வைகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், இக்ககுற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே சுமத்தப்பட்டுள்ளவை என்றும் தமது கட்சி நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் இடம்பெறக்கூடிய ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிக அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு அல்ல என அந்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், நாட்டிலுள்ள சுயாதீன அரச நிறுவனங்கள் அரசியல் அச்சுறுத்தல்களுக்கான கருவிகளாகப் பயன்படுத்த முற்பட்டால், நாட்டையும் நாட்டின் ஜனநாயகத்தையும் மதிக்கும் அனைத்துப் பிரஜைகளும் அது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களை ஒன்றிணைத்து எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மக்கள் பேரணியொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த பின்னணியில், பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை கேள்விக் குறியாக உள்ளதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த மக்கள் பேரணி அவர் எதிர்பார்த்தபடியே நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.!

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி தம்புளுவன, மாரலிய…

48 0 0
இலங்கை செய்திகள்

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையைக் கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும்.!

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைவதற்கு அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும் மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.!

அரசின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என்று மக்கள் போராட்ட…

55 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம்.!

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி…

44 0 0