நானுஓயாவில் நீரில் மூழ்கி இருவர் உ**யிரிழப்பு
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதான பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதான அன்பழகன் நிக்சன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றுடன் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குறித்த இருவரும் குளிப்பதற்காகச் சென்றிருந்தபோதே நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.