உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

செட்டிகுளம் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சத்தியலிங்கம் எம்.பி. பல்வேறு கோரிக்கைகள்

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
102 பார்வைகள்

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (03.09.2026) அபிவிருத்திக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம், செட்டிகுளம் பிரதேச மக்களின் காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தார்.

வீரமாணிக்கங்குளம், முசல்குத்தி பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்து மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார். இதற்கு ஒரு மாதத்திற்குள் 250 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என அபிவிருத்திக்குழுத் தலைவர் உறுதியளித்தார்.

கப்பாச்சியில் சுமார் 1,700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் சத்தியலிங்கம் எம்.பி. கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இவ்விடயம் நாளை நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பேசப்படும் என தெரிவித்தார்.

மேலும், செட்டிகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அபிவிருத்தி செய்தல், முக்கிய சந்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைத்தல், மக்களின் காணிகளில் எல்லைக்கற்கள் இடுவதை நிறுத்துதல், நேரியகுளத்தில் தபால் நிலையம் அமைத்தல் மற்றும் செட்டிகுளத்தில் மின்சார சபை நுகர்வோர் சேவை மையம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

103 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

119 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0