உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நிலையான உணவு முறைமைகள் பற்றிய இலங்கையின் பாரம்பரிய அறிவிலிருந்து உலகிற்கு முக்கியமான ஒரு பாடம்

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
66 பார்வைகள்

பூட்டானில் நடைபெற்ற உலக உச்சிமாநாட்டில், நிலையான உணவு முறைமைகள் தொடர்பான இலங்கையின் பாரம்பரிய அறிவை பிரதமர் உலகிற்கு எடுத்துரைத்தார்.

2026 செப்டம்பர் 01 ஆம் திகதி பூட்டானின் டுங்கார் ட்சோங்கில் (Dungkar Dzong) நடைபெற்ற, “நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக விழிப்புணர்வுடன் எழுச்சி பெறுதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) எனும் தலைப்பின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முதன்மை உரையாற்றினார்.

2026ஆம் ஆண்டு விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாடானது (Global Conscious Food Systems Summit – GCFSS), நிலையான, நியாயமான மற்றும் மீளுற்பத்தி உணவு முறைமைகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான விழிப்புணர்வு, சமூக விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மாற்றத்தின் பங்களிப்பு குறித்து கவனம் செலுத்தி நடத்தப்படுகின்றது. பூட்டான் அரசாங்கம், விழிப்புணர்வு உணவு முறைமைகள் கூட்டணி (Conscious Food Systems Alliance – CoFSA) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பன இணைந்து, “உணவு முறைமைகளின் மாற்றத்தின் இதயத்தை இயங்கச் செய்தல்” (Activating the Heart of Food Systems Transformation) எனும் பரந்த தலைப்பில் இதனை ஏற்பாடு செய்திருக்கின்றன.

இந்த உலக உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இலங்கையர்களாகிய தாம் உணவு உற்பத்தியிலிருந்து சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் நுகர்வு வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை பரம்பரை பரம்பரையாகப் புரிந்துகொண்டு, அந்த மரபை முன்னெடுத்துச் செல்வதில் ஓர் இலங்கையராகப் பெருமிதமடைவதாகத் தெரிவித்தார்.

முதன்மை உரையைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டானின் பிரதமர் திரு. தாஷோ செரிங் தோப்கே (Dasho Tshering Tobgay) அவர்களுடன் “விழிப்புணர்வுத் தலைமை – மேலும் நீதியான மற்றும் புத்துயிர் பெறும் உலகத்திற்கான மாற்றத்தை எளிதாக்கும் கலை” (Conscious Leadership – The Art of Facilitating Transformation for a More Just and Regenerative World) எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.

இலங்கையின் பாரம்பரிய உணவு முறைமைகள் நிலைத்தன்மை மற்றும் சமநிலை பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் அமைந்திருந்தன என்றும், பாரம்பரிய விவசாய முறைமைகள் இயற்கைக்கு எதிராக அமையாது, இயற்கையோடு இயைந்து செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குழு விவாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உணவுப் பாதுகாப்பு, சிறந்த விவசாய நடைமுறைகள், பெண்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் நிலையான சமூக, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்த உலக உச்சிமாநாடானது, நிலையான உணவு முறைமைகள், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதில் விழிப்புணர்வுமிக்க தலைமைத்துவத்தின் பங்களிப்பு குறித்து, இலங்கையின் கருத்துகளையும் அனுபவங்களையும் உலகம் அறியச் செய்வதற்கான முக்கிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

112 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

111 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0