உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
60 பார்வைகள்

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சிய அமைப்பின் நிதி ஆதரவுடன் மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் தொழிற்கூடம் அமைக்கும் பணியில் இன்றைய தினம்(25) மூன்றாவது தொழிற்கூடமாக மடு பிரதேச செயலக பிரிவில் பெரியபண்டிவிரிச்சான் கிழக்கில் இயங்கி வரும் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்காக திறந்துவைக்கப்பட்டது.

6.5 மில்லியன் பெறுமதியான இயந்திரங்களுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உதவி அரசாங்க அதிபர் பிரதீப் அவர்களும் சிறப்பு விருந்தினர்கள் மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சிய திட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் பத்திநாதன், மடு பிரதேச செயலாளர் கி.அ.அமல்ராஜ் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் கிராம சேவையாளர்கள், மடு பிரதேச செயலக ஊழியர்கள், கிராம மக்களும், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

Photo – ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்மேலும் 90 நாள்களுக்கு நீடிப்பு! 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

பு.கஜிந்தன் திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

75 0 0