உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு தொடர்பில் 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
192 பார்வைகள்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் ஊர்காவற்றுறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப் பிறப்பித்தது. அதன்படி, இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ். குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை நீதிமன்றத்துக்கு செப்ரெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்பதாக, வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார், 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹையஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். எனினும், அந்த ஹையஸ் வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0