உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா பறிமுதல்; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
146 பார்வைகள்

இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டுவரப்பட்ட 297 கிலோ கஞ்சா இன்று (8) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல்காரர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் பிரப்பன் வலசை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 297 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேனுடன் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த பொலிஸார் அங்கு நின்று கொண்டிருந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இவை பிரப்பன்வலசை கடற்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தமை தெரியவந்தது.

மேலும் இது சம்பந்தமாக முக்கிய குற்றவாளியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளிடம் தெரிவிக்கையில்,
பிரப்பன்வலசை கடற்கரையில் 297 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 212 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 670 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கிலோ 800 கிராம் மெத்தப்பெட்டமன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருவதுடன் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

57 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0