யாழில் இடம்பெற்ற விபத்து; தடம்புரண்ட வாகனம்.!
இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வர்த்தக நிறுவனம் ஒன்றின் வாகனமானது ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த வாகனமானது வீதி ஓரத்தில் இருந்த எல்லைக் கல்லுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது குறித்த வாகனம் தடம்புரண்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவரும் சிறு காயங்களுடன் உயிர் ஆபத்து இன்றி தப்பியுள்ளனர்.
