உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குள் பாடசாலைகளைச் சுவீகரிக்க சட்டமில்லை – சர்வேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வெற்றி!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
47 பார்வைகள்

மாகாணசபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் ‘தேசிய பாட சாலைகள் என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி என்பது மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும்.

எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350 பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய பாடசாலைகளாகத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.

அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமா மேலும் 650 பாடசாலைகளைச் சேர்த்து ‘ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார்.

ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் இதனைத் தீவிரமாக முன்னெடுத்தனர்.

மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகக் கலாநிதி க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

வழக்கின் தொடர்ச்சியாக, 18.08.2023 மற்றும் 20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய பாடசாலை முத்திரையைப் பயன் படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு உத்தரவிட்டது.

2025 மே 23 அன்று மன்றில் ஆஜரான பிரதி சொலி சிட்டர் ஜெனரல், “குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.

ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும் உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்துமூல உறுதிப்பாட்டையும் சட்டமா அதிபர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.

அதற்கமைய வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்துடன் நாடு தழுவியரீதியில் கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0