உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு; தனியார் பேருந்து நடத்துனருக்கு பணித்தடை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
81 பார்வைகள்

வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு உட்பட்ட நடத்துனர் ஒருவர் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுக்கு முழு ஆளிற்கான பணம் அறவீடு செய்ததற்காக ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தினதும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினதும் கட்டுப்பாட்டை மீறி வயது வந்தோர்களுக்கான முழுத் தொகை பணம் அறவிட்டதற்காக குறித்த சிறுவனின் தந்தை வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திடம் முறையிட்டதன் பிரகாரம் சங்கம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பேருந்து நடத்துனர் சிறுவனுக்கு முழு கட்டணம் அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஒரு வாரங்கள் நடத்துனர் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையினுடைய பேருந்தானது மருதங்கேணியிலிருந்து குடத்தனை செல்வதற்காக முழு ஆளுக்கான தொகையாக 108 ரூபாவும், சிறுவர்களுக்கு 54 ரூபாவும் அறவிட்டிருந்தது. ஆனால் தனியார் போக்குவரத்து சேவை பேருந்துகள் இருவருக்கும் அதே அளவு தூரத்திற்கு 140 ரூபாய் வீதம் அறவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0