உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சொகுசு பேருந்து மீது தீ வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
46 பார்வைகள்

கடுவலை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று, இன்று புதன்கிழமை (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவரால் தீ வைத்து முழுமையாக எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்கள் இன்றைய தினம் அதிகாலை வேளையில் குறித்த சொகுசு பேருந்து மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவலை – மாத்தறை பாதையில் சேவையில் ஈடுபடும் பேருந்தே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுகடுவலை – கொள்ளுப்பிட்டி பாதையில் சேவையில் ஈடுபடும் மேலும் இரு பேருந்துகளுக்கும் தீ பரவியதால் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

சம்பவம் நடந்த போது எரிக்கப்பட்ட பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் இருந்த மற்றொரு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் அவர்களை எச்சரித்ததைத் தொடர்ந்து, இருவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும் தாக்குதலுக்கான பின்னணியைக் கண்டறிவதற்கும் கடுவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0