உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொலிஸ்மா அதிபர் குறித்த சாகரவின் சர்ச்சையான கருத்து; உடனடி விசாரணைக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
41 பார்வைகள்

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சாகர காரியவசம், நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு கோரியதுடன், அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக வரலாற்றில் இணைவதைத் தான் காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சாகர காரியவசத்தின் இந்தக் கருத்து குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசு இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை இலகுவாக எடுத்துக்கொள்ளாது என்று கூறினார். அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில் மக்களைப் பலி கொடுத்த ஓர் அரசியல் இயக்கத்தின் மனநிலையே இத்தகைய கூற்றுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் விமர்சித்தார்.

தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றமையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகள் காரணமாக அச்சமடைந்துள்ள நபர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும் சந்தேகம் வெளியிட்டார்.

விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0