உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மஹர கலகம் திட்டமிட்ட பலவீனப்படுத்தும் செயற்பாடாக இருக்கலாம்; நீதி அமைச்சர் அதிர்ச்சித் தகவல்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
53 பார்வைகள்

சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 3.45 மணியளவில் மூன்று கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி கூச்சலிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை அதிகாரி அங்கு சென்று அவர்களுடன் பேச்சு நடத்திய போதிலும், ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் ஒன்றுகூடி கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக மறைத்துவிட்டு பிரதான இரும்பு வாசல்களை மூடியுள்ளனர். எனினும், கைதிகள் கதவுகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தியதுடன், சமையலறை, உணவு உண்ணும் இடம், வைத்தியசாலை, பதிவுப் பிரிவு மற்றும் அலுவலகப் பகுதிகளைச் சேதப்படுத்தியும் தீ வைத்தும் அழித்துள்ளனர். பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடாக இருந்தபோதிலும், மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை. ஒரே கட்டத்தில் ஆயிரம் பேர் ஒன்று கூடியமை சந்தேகத்துக்குரியது.

கைதிகள் கூண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை போன்றவையே திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக ஏற்பாடாக வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைக்கப்பட்டு மஹர சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலையின் சொத்துகளுக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டமை மக்களின் வரிப்பணத்தையே பாதிக்கின்றது என்பதைக் கைதிகளின் உறவினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண எனது தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0