உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
57 பார்வைகள்

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 31ஆம் திகதி 2 கிராம் 385 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்து, தெல்தெனிய நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி – தென்னேகும்புர பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் 10 கிராம் 795 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தென்னேகும்புர பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

எனினும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் விடுவிப்பதற்காக, வேறொரு நபர் தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்க முயன்றுள்ளார்.

இதன்போது, தலைமையக பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கையின் மூலம், இலஞ்சப் பணத்தைக் கொடுக்க வந்த நபர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தினுள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, தென்னேகும்புர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞராவார்.

அவரிடமிருந்த 5,000 ரூபாய் பணத்தாள்கள் 100 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்ட விதிகளின்படி மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

50 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0