உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற சாரதிகள் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
49 பார்வைகள்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை வீதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று திங்கட்கிழமை (03) அப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் வாகனங்களுடன் இரண்டு சாரதிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளையும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0