பலத்த காற்று : மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.