உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

விசேட கண் மருத்துவ நிபுணர்களால் நோயாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
118 பார்வைகள்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரு தினங்களாக நடாத்தப்பட்ட விசேட இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமில், சுமார் 550 நோயாளர்களுக்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுகாதார வரலாற்றிலேயே மிகச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படும் இம்முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் Sammanthurai Golden City Lions Club, NAJA Residency, மரியம் Filling Station மற்றும் Farook Filling Station ஆகிய அமைப்புகளின் இணை அனுசரணையில் கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இலங்கை கண் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விசேட கண் மருத்துவ நிபுணர்கள் நேரடியாக வருகை தந்து இச்சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

இச்சிகிச்சை முகாமின் முதற்கட்டமாக ஆகஸ்ட் 01 ஆம் திகதியன்று 300 நோயாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 02 ஆம் திகதியன்று 250 நோயாளர்களுக்கும் கட்டம் கட்டமாகச் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

இத்தகைய மகத்தான மருத்துவ சேவையினைச் சிறப்பாக முன்னெடுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய விசேட மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், பின்னணி ஊழியர்கள், தொண்டர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0