உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மண்கும்பான் வெள்ளைக் கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
130 பார்வைகள்

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான், வெள்ளைக் கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை (02) பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் பிரதம பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

வெள்ளைக் கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கட்டுமானக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல் அஸீஸின் (காஸிமி) கிராஅத்துடன் ஆரம்பமானது. பள்ளிவாசல் பொருளாளர் எஸ்.எச்.எம். நியாஸ் தலைமை உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மண்கும்பான் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அ. அன்ரன் ஜேசுதாசன் கிராம மட்டத் தமிழ் சமூகப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றியமை, அப்பகுதியின் இன நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, பள்ளிவாசல் மீள் கட்டுமானத்துக்கான அடிக்கல் நடும் பிரதான நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ. றஜீவன், க. இளங்குமரன், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். பைசல், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கட்டுமானக் குழுவினர், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

59 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

39 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

67 0 0